← Back to Blogs
Events

திருச்சி மாவட்ட குறு சிறு தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு மற்றும் சிறப்பு விற்பனையாளர் மேம்பாட்டு நிகழ்வு

📅 October 09, 2026 👁️ 965 Views

பட்டியலின மற்றும் பழங்குடியின தொழில்முனைவோர்களை ஆதரிக்கவும், அரசின் கொள்முதல் நடவடிக்கைகளில் அவர்கள் பங்கேற்க ஊக்கப்படுத்திடவும் தேசிய பட்டியலின, பழங்குடியின மையம் தொடர்ந்து பணி செய்து வருகிறது.

அதன் தொடர் செயல்பாடாக கோவையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் குறு சிறு தொழில் முனைவோர் கூட்டமைப்பான சி ஏ ஐ - யுடன் இணைந்து, திருச்சி மாவட்ட எஸ்சி எஸ்டி குறு, சிறு தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு மற்றும் சிறப்பு விற்பனையாளர் மேம்பாட்டு நிகழ்ச்சியை  திருச்சி பல்நோக்கு சமூகசேவை சங்க கூட்ட அரங்கில் நடத்தியது.

நிகழ்வின் துவக்கமாக தேசிய பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் மைய சென்னை முதுநிலை கிளை மேலாளர் பிரசாத் அனைவரையும் வரவேற்று பேசினார்.

தொடர்ந்து குறு சிறு நடுத்தர தொழில்முனைவோருக்கான சி ஏ ஐ அமைப்பின் தலைவர் நவநீத சிவக்குமார் துவக்க உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் லிமிடெட் (BHEL), 

இந்திய உணவுக் கழகம் (FCI),

திருச்சி படைக்கல தொழிற்சாலை (OFT),

இந்தியன் ஆயில் கார்பரேஷன் (IOC), 

தெற்கு இரயில்வே,

இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டடு அக்கவுண்டன்ட் (ICAI)

உள்ளிட்ட பல்வேறு அரசுசார் நிறுவனங்களின் உயரதிகாரிகள் கலந்துகொண்டு அவரவர் நிறுவனங்களின் டெண்டர் வாய்ப்புகள் குறித்தும் வெண்டார்களின் தகுதிகள் மற்றும் டெண்டர் பங்கேற்பு முறைகள் குறித்தும் விளக்கினர்.

மேலும் குறு சிறு நடுத்தர தொழில் முனைவோருக்கான உதயம் சான்றின் அவசியம் குறித்தும், ஒன்றிய அரசின் இ-மார்க்கெட் பற்றிய செயல்முறை குறித்தும் தொழில் முனைவோர்களுக்கு எஸ்சி எஸ்டி மையத்தின் பிமராவ் தெளிவாக விளக்கினார்.

நிகழ்வில் கலந்து கொண்ட புதிய தொழில் முனைவோர்களுக்கு உதயம் சான்றிதழ் மற்றும் இ மார்கெட் போர்டல் இலவசமாக பதிவு செய்து தரப்பட்டது.

தொழில்முனைவோருக்கான விழிப்புணர்வு மற்றும் வெண்டார் டெவலப்மெண்ட் நிகழ்வில் 200க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

கருத்துமர்வின் முடிவில் சி ஏ ஐ அமைப்பின் மகளிர் பிரிவு தலைவர் ஜனனி நன்றி கூறினார்.

CAI அமைப்பின் உறுப்பினர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.