← Back to Blogs
Events

கள்ளக்குறிச்சி மாவட்ட தொழில் முனைவோருக்கான கருத்தரங்கம்.

📅 September 25, 2026 👁️ 45 Views

பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் மையம் சார்பில் குறு சிறு தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு மற்றும் சிறப்பு விற்பனையாளர் மேம்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம்  தச்சூரில் உள்ள ஜேதனியார் மஹாலில் எஸ்சி எஸ்டி குறு மற்றும் சிறு தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு மற்றும் சிறப்பு விற்பனையாளர் மேம்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

தேசிய பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் மையம் சென்னை நடத்திய இந்நிகழ்ச்சியில் NLC, SAIL, BHEL, FCI பல்வேறு நிறுவனங்களின் வேலை வாய்ப்புகள் குறித்து அந்தந்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் விளக்கினர்.

மேலும் அரசுத் துறை ஒப்பந்தங்களில் பங்கேற்பது எப்படி அரசின் ஈ மார்க்கெட் பற்றிய செயல்முறை விளக்கம் குறித்தும் தொழில் முனைவோர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. 

நிகழ்வில் கலந்து கொண்ட தொழில் முனைவோர்களுக்கு உதயம் சான்றிதழ் இலவசமாக பதிவு செய்து தரப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஜே இ பத்மஜா தலைமை தாங்கினார், தேசிய பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் மைய முதுநிலை கிளை மேலாளர் பிரசாத் அனைவரையும் வரவேற்று பேசினார்.

சி ஏ ஐ அமைப்பின் தலைவர் நவநீத சிவக்குமார் துவக்க உரையாற்றினார். கள்ளக்குறிச்சி மாவட்ட மாவட்ட தொழில் மைய  பொதுமேலாளர் சந்திரசேகரன் சிறப்புரையாற்றினார். 

இக்கூட்டத்தில் 200க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். கருத்துமர்வின் முடிவில் சி ஏ ஐ அமைப்பின் மகளிர் பிரிவு தலைவர் ஜனனி நன்றி கூறினார்.